Freitag, 24. Mai 2013

கிட்டத்தட்ட 530 ஆண்டுகளின் பின்னர் கார் பார்க்கில் கண்டறியப்பட்டது ரிச்சாட் III மன்னனின் உடலம்

_65700812_87f13eaf-9ab0-4dc0-89ed-9db0af

இங்கிலாந்தின் லெஸ்டர் நகர மையத்தில் கார்கள்
நிறுத்துமிடம் ஒன்றில் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட யுத்த தழும்புகள்
கொண்ட எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம்
ரிச்சர்டின் சடலம் தான் என்பதை அந்நாட்டின் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

பழம்பெரும் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரால் ஒரு கூண்
விழுந்த வில்லன் என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் ரிச்சர்ட்
1485ஆம் ஆண்டு நடந்த பொஸ்வொர்த் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தார்.





130204115850_richard_304x171_universityoநகர மையத்து கார் நிறுத்துமிடத்தில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

அதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் கழிந்து துறபற
மடங்கள் கலைக்கப்பட்டபோது, இவரது உடல் எச்சங்கள் அது புத்தைக்கப்பட்ட
இடத்திலிருந்து காணாமல் போயிருந்தன.

வளைந்த முதுகெலும்பு கொண்ட இந்த எலும்புக்கூட்டை
அகழ்வாராய்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பரில் தோண்டி எடுத்த பின்னர் அதிலே
விஞ்ஞானிகள் பலவிதமான அறிவியல் பரிசோதனைகளை நடத்தி அது மன்னர் மூன்றாம்
ரிச்சர்ட் என்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.

_65682907_richardcomp.jpg

மன்னர் ரிச்சர்ட் தோற்றது இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு பெரிய திருப்பு முனை ஆகும்.

தமிழில் :  பிபிசி தமிழ்

0 Kommentare:

Kommentar veröffentlichen